வணக்கம் நண்பர்களே!
இன்று காலையில் ஒரு நண்பர் வந்திருந்தார். அவருக்கு சுக்கிரன் எட்டாவது வீட்டில் அமர்ந்திருந்து. அவர் என்ன சொல்லுகிறார் என்றால் எனக்கு திருமண ஆசை கிடையாது நான் ஆன்மீகத்திற்க்கு செல்லுகிறேன் என்றார்.
திருமணம் செய்தால் ஆன்மீகத்திற்க்கு செல்லகூடாது என்ற தவறான கருத்தால் பாதிக்கப்பட்டு இருப்பார் என்று நினைக்கிறேன். திருமணத்திற்க்கு ஆன்மீகத்திற்க்கும் எந்த சம்பந்தமே இல்லை. பிரம்மசாரியாக இருந்துக்கொண்டு தான் ஆன்மீகத்தில் சாதிக்கமுடியும் என்பது தவறான ஒரு கண்ணோட்டம்.
இவரின் ஜாதகத்தில் சுக்கிரன் எட்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரன் எட்டாவது வீட்டில் அமர்ந்தால் பெரும்பாலும் நல்ல செல்வசெழிப்பை உண்டு செய்வார்.அதே நேரத்தில் காமத்தின் மீது ஈடுபாட்டை அளிக்கமாட்டார்.
பணம் வந்துக்கொண்டே இருக்கும். காமம் வராது. பல பணக்காரர்களின் மனைவிகள் தடம்மாறுவதற்க்கு காரணமும் சுக்கிரன் எட்டாவது வீட்டிற்க்கு செல்வது மட்டுமே. சுக்கிரன் எட்டில் மறைந்தால் திருமணம் நடைபெற்றுவிடும் ஆனால் மனைவி மீது ஒரு வெறுப்பை காட்டுவார்கள். தன் இயலாமையை வெறுப்பாக மனைவியிடம் காண்பிப்பது இவர்களின் வேலையாக இருக்கும்.
சுக்கிரன் எட்டில் மட்டும் இருக்கம் ஜாதகத்திற்க்கு அதிகப்பட்சம் அவர்களின் ஜாதகத்தில் நான்காவது வீடான சுகஸ்தானமும் கெடும். பல ஜாதகங்களை நான் இப்படி பார்த்து இருக்கிறேன்.
இவர்களுக்கு தகுந்த பரிகாரம் வெள்ளிக்கிழமை அன்று ஏதோ ஒரு அம்மனை வழிப்பட்டு வருவது நல்லது. வெள்ளிக்கிழமை அன்று ஏழை பெண்களுக்கு உதவி செய்வதும் நல்லது. அத்திபழம் சாப்பிடலாம்.
சம்பந்தப்பட்ட ஜாதககரின் சுகஸ்தானத்தின் அதிபதிக்கும் சேர்த்து பரிகாரம் செய்யவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
ரிஷப lagnamaga இருந்து சுக்ரன் 8இல் இருந்தாலும் இதே பலன் இருக்குமா ஐயா..?
Post a Comment