Chandrasekharan said...
ரிஷப lagnamaga இருந்து சுக்ரன் 8இல் இருந்தாலும் இதே பலன் இருக்குமா ஐயா..?
வணக்கம் ரிஷபம் சொந்தவீடு என்பதால் சுக்கிரன் நல்லதை செய்வார் என்ற கணக்கு கிடையாது. பணவிசயத்தில் அதிகமாக தந்துவிடுவார். நான் ஒரு சிலருக்கு ரிஷபத்தில் சுக்கிரன் எட்டாவது வீடாக இருப்பவர்களை மனைவியுடன் இருந்து பிரித்து வைக்கிறார். அயல்நாட்டில் அல்லது வெளியூர்களில் வேலை செய்ய போய்விடுகிறார்கள்.
பழைய காலங்களில் திருமணம் என்ற பந்தம் ஏற்பட்டுவிட்டால் இருவரும் பிரியவே மாட்டார்கள். இறப்பில் தான் பிரிவார்கள். முன்காலத்தில் இறந்தால் கூட உடன்கட்டை ஏறுதல் என்று இருவரும் இறந்தார்கள். இருவரும் ஒருவர் என்பதால் அப்படி செய்தார்கள்.
இப்பொழுது சூழ்நிலை அப்படி இல்லை. இன்றைய காலத்தில் இருக்கும் சூழ்நிலையில் இருவரும் பிரிந்து இருப்பது எளிதாகிவிட்டது. வேலை விசயமாக ஒரு மாத காலங்கள் பிரிந்து இருக்கலாம். ஒரேயடியாக பிரிந்து இருக்ககூடாது.
எட்டாவது வீடாக ரிஷபத்தில் சுக்கிரன் இருந்தால் கணவன் மனைவியை பிரித்து வைக்கும். உடல் இயங்கும் விதத்தில் இருவரும் ஒரு மாதத்திற்க்கு அதிகமாக பிரிந்து இருத்தல் கூடாது. ரிஷபத்தில் சுக்கிரன் இருக்கும்பொழுது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு காம எண்ணங்கள் இருக்கும் ஆனால் சுக்கிரன் பிரித்து வைக்கும் வேலையை செய்வார்.
சுக்கிரனை மட்டும் வைத்து நாம் எதனையும் தீர்மானிக்கமுடியாது. ஒரு கேள்விக்கு பல வீடுகளை பார்த்து தான் நாம் பலன் சொல்லமுடியும். இது ஒரு தகவல் மட்டுமே
சுக்கிரனை மட்டும் வைத்து நாம் எதனையும் தீர்மானிக்கமுடியாது. ஒரு கேள்விக்கு பல வீடுகளை பார்த்து தான் நாம் பலன் சொல்லமுடியும். இது ஒரு தகவல் மட்டுமே
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு நன்றி ஐயா. ஆனால் என் கேள்வி, ரிஷப lagnathirku அதன் அதிபதி சுக்ரன் 8ஆம் இடமான் தனுசு வில் இருந்தாலும் அதே பலன் தானா? குரு அங்கேய் ஆட்சி பெற்று உள்ளார்.
Post a Comment