ஒரு நண்பர் கேள்வி ஒன்றைக்கேட்டு இருந்தார். அவர் ஒரு சாமியாரைப்பற்றி கேள்வி கேட்டு அனுப்பியிருந்தார்.
அவரின் கேள்வி
கடவுள் இல்லை என்று சொல்லுகிறார் ஒருவர் ஆனால் அவர் மடத்தில் பூஜைகளை செய்துக்கொண்டு இருக்கிறார் இதனைப்பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்.
பதில்
எந்த ஒரு சாமியாரும் ஒரு தேவதை இல்லாமல் இருக்கமாட்டார்கள். அந்த தேவதைக்கு பூஜை முறையில் மட்டுமே அதற்கு நாம் செய்யமுடியும். அது இல்லாமல் நான் தியானம் செய்கிறேன் அதன் மூலம் எல்லாம் கிடைத்துவிடும் என்றால் ஒன்றும் கிடைக்காது. சாமியார்கள் வெளியில் தியானம் எல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள் உள்ளுக்குள் அவர்கள் பூஜை செய்வார்கள்.
மக்களுக்கு தியானம் யோக எல்லாம் கற்று தருவார்கள். பூஜை செய்வதை ஒரு சாமியாரும் யாருக்கும் கற்று தரமாட்டார்கள். என்றைக்காவது நீங்கள் இதனைப்பற்றி சிந்தித்து இருந்தால் நீங்கள் விழிப்புணர்வை அடைந்திருக்கலாம்.
தியானம் வழியாக அனைத்தையும் அடையலாம் என்று உங்களுக்கு சொல்லி தருபவர். அவர் தியானம் செய்தே அனைத்தையும் அடைந்திருக்கலமே ?அதனை விட்டுவிட்டு ஏன் பூஜை செய்யவேண்டும். அங்கு தான் உள்குத்து இருக்கின்றது.
இந்து மதத்தின் அடிப்படை அதன் பூஜை முறையில் அமைந்திருக்கிறது. ஒரு தெய்வத்தை வைத்து தான் அனைத்தையும் செய்யமுடியும். அதன் துணை இல்லாமல் எதனையும் நாம் செய்துவிடமுடியாது. ஒரு தேவதையை அவர் வசியம் செய்து அதற்கு பூஜை செய்துக்கொண்டே இருப்பார்கள். அதன் வழியாக மக்களுக்கு நல்லது செய்வார்கள். இதனை வெளியில் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் அவரை விட்டுவிட்டு ஏதோ ஒரு தேவதையை தேடி சென்றுவிடுவீர்கள் அப்புறம் எதை வைத்து பிழைப்பை நடத்தமுடியும்.
நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு குருவும் பின்னாடி பல வேலைகளை செய்வார்கள் அதனை ஒருபொழுதும் உங்களுக்கு சொல்லி தரமாட்டார்கள். சொல்லிக்கொடுத்தால் நீங்கள் சென்று ஆசிரமம் தனியாக ஆரம்பித்துவிடுவீர்கள்.
தியானம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார் ஆனால் அவர் பூஜை செய்துக்கொண்டிருக்கிறார் அவ்வாறு செய்பவரிடம் நீங்கள் சென்று எனக்கு தியானம் எல்லாம் வேண்டாம் எனக்கு நீங்கள் செய்யும் பூஜைகளை சொல்லிக்கொடுங்கள் என்று கேட்டுபாருங்கள் அப்புறம் தெரியும் என்ன நடக்கிறது என்று நீங்களே புரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு அவர்கள் சொல்லி தருவது எல்லாம் ஒரு ஏமாற்று வேலை தான் அதில் இருந்து நான் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட்டேன் என்று சொன்னால் நீங்கள் தான் முட்டாள்.
இவர் இந்த கேள்வியை கேட்டதின் வழியாக உங்களுக்கு பல தகவல்களை சொல்லபோகிறேன். ஒவ்வொன்றாக வரும் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Dear Sir,
Thnks for your WONDERFUL COMMENTS
Antony
Post a Comment