வணக்கம்!
நாம் தினமும் அம்மன் ஹோமம் செய்ய ஆரம்பித்த நாள்களில் இருந்து பல நல்லவிசயங்கள் அதுவாகவே நடந்துக்கொண்டு வருகின்றது. அம்மனின் ஹோமம் அப்படிப்பட்ட ஒன்று.
அம்மனின் ஹோமத்தை தனிநபர்களின் வளர்ச்சிக்கு மற்றும் தொழில் செய்பவர்களுக்கு என்று நிறைய செய்து வருகிறேன். என்னுடைய வீட்டில் இதனை தற்பொழுது செய்துக்கொண்டு வருகிறேன். தினமும் காலையில் இதனை செய்யும்பொழுது தானாகவே பல விசயங்கள் நடைபெறுகிறது.
நேற்று நடைபெற்ற தங்கரத புறப்பாடு கூட அம்மனின் சக்தியால் நமக்கு கிடைத்தது. நேற்றை நடந்ததை பார்த்துவிட்டு பல நண்பர்கள் அவர்களின் ஊருக்கு அருகில் இருக்கும் முருகன் ஆலயத்தில் தங்கரதம் இழுக்க வாருங்கள் என்று கூப்பிட்டார்கள். அனைத்தும் அம்மன் நமக்கு வழங்குகிறது
நான் தொடர்ந்து அம்மன் ஹோமம் செய்துவருகிறேன். இனிமேல் பாருங்கள் நிறைய ஆன்மீகநிகழ்வுகளை ஏற்பாடு செய்து தரும். நான் சொந்த ஊரில் இருக்கும்பொழுது தினமும் காலையில் அம்மன் ஹோமம் நடைபெறும். உங்களின் வேண்டுதலை தினமும் காலையில் வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment