வணக்கம்!
ஒரு உண்மை சம்பவத்தை சொல்லுகிறேன். ஒருவர் எனக்கு தெரிந்தவர் இருந்தார். அவர் நிலத்தில் ஒரு வைரவர் கோவில் இருந்தது. வைரவர் கோவில் என்றால் ஒரு மரம் தான். அந்த மரத்தில் வைரவரை கோவிலாக கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வணங்கிவந்தனர்.
மரம் கொஞ்சம் அவரின் விவசாய நிலத்தில் இருந்தது. இவர் அந்த மரத்தை வெட்டிவிட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வந்து கேட்கும்பொழுது உங்களுக்கு புதிய கோவில் கட்டி தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.
ஒவ்வொரு வருடங்களாக சென்றது ஆனால் கோவிலை மட்டும் கட்டவே இல்லை. அவர்களை ஏமாற்றிவிட்டார். அவர்களும் கேட்டுப்பார்த்தார்கள் கோவிலை கட்டிதாருங்கள் என்று கேட்டார்கள். இவர் அதனை செய்யவே இல்லை.
காலங்கள் சென்றது தன் கடைசி காலத்தில் ஏதோ நாய் ஒன்று என்னை கடிக்கவருகின்றது என்று சொல்லி புலம்பஆரம்பித்தார். கொஞ்சநாளில் அவர் இறந்தார். அவரின் வாரிசுகள் இன்றுவரை ஒரு நல்ல வேலையில் அமரமுடியவில்லை ஒரு தொழில் கூட செய்யமுடியாமல் இருக்கின்றனர். அவர்களின் வாரிசுகளிடம் நான் சொல்லிப்பார்த்தேன் கேட்பது போல தெரியவில்லை.
விதி அவர்களை சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது நாம் சொல்லி புரியவைக்கமுடியாது. காலம் சென்றவுடன் அவர்களுக்கு ஒரு நல்ல தசா வந்து திருந்தி இதனை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment