வணக்கம்!
எத்தனையோ சாமியார்கள் நான் தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருந்துள்ளனர். தற்பொழுதும் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றனர். நீங்கள் ஒன்றை மட்டும் கவனித்தால் இதில் உள்ள உண்மை புரியும்.
இதுவரை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு மேல் கோவில்கள் மட்டுமே இருந்து இருக்கின்றது. பல கோடி சாமியார்கள் வந்துவிட்டு சென்றுவிட்டனர். எல்லாம் சிலகாலம் தான் இருப்பார்கள் அதோடு போய்விடுவார்கள் காலம் காலமாக கோவில்கள் மட்டுமே இருக்கின்றது.
சாமியார்களிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சாமியார் வழியை சொல்லலாம் நான் தான் கடவுள் என்னை மட்டுமே வணங்குங்கள் என்று சொன்னால் அங்கு தான் பிரச்சினை வரும்.
ஆன்மீகத்தில் உள்ளவர்களை சந்தியுங்கள் அதோடு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்யுங்கள். கோவில்களில் உள்ள இறைவனை தரிசனம் செய்யும்பொழுது நீங்கள் மேம்படலாம். கோவில்களில் உள்ள சக்தி உங்களின் உண்மையான இயல்புக்கு கொண்டு செல்லும்.
திருச்சிக்கு இன்று வருகிறேன். திருச்சியில் உள்ளவர்களை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
திருச்சிக்கு இன்று வருகிறேன். திருச்சியில் உள்ளவர்களை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment