வணக்கம்!
வாழ்வில் நினைத்து பார்த்தால் வாழுகின்ற வாழ்க்கை கொஞ்சநாள் தான் இந்த வாழ்வில் நாம் என்ன செய்தோம் என்று கடைசிநேரத்தில் சிந்தித்து பார்த்தால் கண்டிப்பாக அதில் முக்கால்வாசி பேருக்கு திருப்தி என்பது இருக்காது. வாழ்வை வீணடித்துவிட்டோம் என்று நினைக்கதோன்றும்.
நம்மால் எத்தனை நிகழ்வை நாம் நடத்தி இருப்பாேம் எத்தனை பேருக்கு நம்மால் உதவமுடிந்தது என்று நினைத்து பார்க்கும்பொழுது அதில் ஒன்றும் இல்லை என்றால் வெறுப்பு வந்துவிடும்.
ஒரு சின்ன காரியம் நடைபெறுவதற்க்கு கூட நாம் பல தடைகளை பிறர்க்கு வழங்கி இருப்போம். நாம் எதுவும் உதவவேண்டியதில்லை அந்த இடத்திற்க்கு சென்றால் ஒரு காரியம் நடைபெற்று இருக்கும் ஆனால் நாம் செல்லாமல் தூங்கிக்கொண்டிருந்த காரணத்தால் அந்த காரியம் நடைபெறாமல் போய் இருக்கும்.
மேலே சொன்னது நான் உங்களுக்கு சொல்லவில்லை நான் அப்படி ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக்கொண்டிருந்தேன். இந்த உலகம் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக படைத்தும் இருக்கின்றது நமக்கு கற்றுக்கொடுக்கவும் ஆளை அனுப்புகிறது என்று தான் சொல்லவேண்டும்.
ஒரு பெரியவர் ஒருவர் நிறைய வேலையை இழுத்துபோட்டு செய்துக்கொண்டிருப்பார். அவரிடம் நான் உங்களுக்கு தான் எல்லாம் செட்டிலாகிவிட்டதே நல்லதானே இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் இது எல்லாம் தேவையா என்று கேட்டேன். அவர் என்னிடம் ஒன்றைச்சொன்னார் அதாவது இந்த பூமிக்கு வந்துவிட்டோம் ஏதோ நம்மால் ஏதாவது ஒரு வேலையை செய்யவேண்டும் அல்லவா அதனால் செய்கிறேன் என்றார். உண்மையில் என்னை செருப்பால் அடித்து போல் இருந்தது.
அவர் சொன்ன நாளிலில் இருந்து இன்று வரை நான் ஏதாவது ஒன்றை லாபநோக்கின்றி நல்லதற்க்காக செய்துக்கொண்டே இருக்கிறேன். உங்களுக்கும் இது உதவும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment