வணக்கம்!
நேற்று ஆனைமலை சென்று மாசாணி அம்மனை தரிசனம் செய்தேன். திடீர் பயணமாக அமைந்தது. அம்மன் அருள் வேண்டி இந்த பயணம் செய்தேன். நல்ல தரிசனத்தை அம்மன் கொடுத்தது. இன்று தஞ்சாவூர் வந்துவிட்டேன். மகாசிவராத்திரி இன்று என்பதால் அது சம்பந்தமாக வேலை நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
சிவாராத்திரி சிவனுக்கு மட்டும் விஷேசமான நாள் இருந்தாலும் அதோடு அம்மனுக்கும் விஷேசமான ஒரு நாளாகவே இது இருக்கின்றது. அம்மனையும் வழிபாடு செய்யலாம். நமது அம்மனுக்கு இது மிகப்பெரிய விஷேசமான ஒரு நாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நமது அம்மனையும் இந்த நல்ல நாளில் வேண்டினால் நீங்கள் கேட்கும் வரம் கிடைக்கும்.
பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டனர் அதாவது இன்று இரவு முழுவதும் சிவன்கோவிலில் இருந்தால் போதுமா அல்லது ஒரு முறை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாமா என்று கேட்டனர்.
இரவு முழுவதும் கண்விழிக்கலாம். நாளை அலுவலகம் இருக்கின்றது என்று சொல்லுபவர்கள் ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பூஜைக்கு தேவையான பொருட்களை சிவன் கோவிலுக்கு வாங்கிக்கொடுக்கலாம்.
ஒரு சிலர் வீட்டிலேயே சிவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்று நினைப்பார்கள். தாராளமாக வீட்டிலேயே சாமி கும்பிடலாம். நல்லமுறையில் செய்து அருளை பெறுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment