வணக்கம்!
பாக்கியஸ்தானத்தைபற்றி நீண்ட நாள்களாக பார்த்து வருகிறோம். அதில் நிறைய புண்ணியம் செய்யவேண்டும் என்பதை சொல்லிருக்கிறோம்.
புண்ணியம் மட்டும் செய்துவிட்டு அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் இருக்கவேண்டும். ஏன் என்றால் ஒரு சிலர் நிறைய நல்லது செய்வார்கள் அதே நேரத்தில் அவர்களுக்கு பிரச்சினையும் நிறைய இருக்கும். என்னடா என்று பார்த்தால் அவர்கள் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
கிராமபுறத்தில் இது அதிகம் நடக்கும். அதாவது அடுத்தவர்களின் வீட்டுக்கு மறைமுகமாக ஏதாவது தொந்தரவை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். ஏதோ ஒரு வழியில் இதனை செய்வார்கள்.
நாம் நல்லது மட்டும் செய்தால் பற்றாது பிறர்க்கு தொந்தரவும் கொடுக்காமல் இருக்கவேண்டும். அடுத்தவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று நாம் நினைக்கவேண்டும். இதனை படிக்கும் நகரத்தில் உள்ளவர்களுக்கு இது தெரியாது ஆனால் கிராமத்தில் இருக்கும் நண்பர்களுக்கு இந்த அனுபவமும் இருந்திருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment