வணக்கம்!
தசாவைப்பற்றி பார்த்துவந்தோம். பெரும்பாலான நண்பர்களுக்கு தசா நன்றாக வேலை செய்வதில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். நம்மிடம் சோதிடம் பார்க்க வந்தால் பெரும்பாலான கேள்விகள் உடனடி பிரச்சினை மட்டுமே கேள்விகளாக இருக்கும். எனக்கு இந்த பிரச்சினை வந்து இருக்கிறது இதனை தீர்க்க என்ன செய்வது என்று கேட்பார்கள்.
பிரச்சினை ஏற்பட்ட காரணத்தால் தான் ஜாதகத்தையே எடுத்துள்ளார்கள் இல்லை என்றால் கண்டிப்பாக அதனை எடுக்கமாட்டார்கள். ஒரு சிலர் மட்டும் தான் இதில் எல்லாம் மிகச்சரியாக இருப்பவர்களாக இருப்பார்கள்.நடந்துக்கொண்டிருக்க தசாவுக்கு என்ன செய்தால் அதன் முழுபயனையும் பெறலாம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு அதற்கு தீர்வையும் காணுபவர்களாக இருப்பார்கள்.
ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதனோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு வாழ்விலும் மிகுந்த ஏற்றத்தோடு இருப்பார்கள். ஒரு குறிப்பட்ட காலம் வரை உங்களின் தசா தான் உங்களின் தலைவிதியை நிர்ணக்கப்போகின்றது. படித்துவிட்டு அப்படியே போகாமல் ஜாதகத்தையும் எடுத்து என்ன தசா நடக்கின்றது எப்படி பலனை கொடுக்கின்றது என்பதையும் பாருங்கள்.
உங்களின் ஜாதகத்தை உங்களின் சோதிடர்களிடம் காண்பிக்கும்பொழுது எனக்கு நடக்கும் தசா எப்படி பலனை கொடுக்கிறது. அந்த தசாவிற்க்கு என்ன பரிகாரம் செய்தால் பலனை பெறலாம் என்பதை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment