வணக்கம்!
வெள்ளிக்கிழமை மதியநேரத்தில் தைலகுளியல் குளிக்க சொல்லிருந்தேன். பழைய பதிவில் இதனைப்பற்றி நாம் பார்த்து இருக்கிறோம். இதனை இதுவரை எத்தனை பேர் கடைபிடித்து வருகின்றீர்கள் என்பது தெரியவில்லை மீண்டும் இந்த பதிவை எழுத ஒரு சில நண்பர்கள் காரணமாக இருந்தனர். அவர்கள் இதனை கடைபிடித்து நல்ல நிலைக்கு வந்ததாக சொன்னார்கள்.
வெள்ளிக்கிழமை மதியத்திற்க்கு பிறகு ஏதாவது ஒரு தைலத்தை உடல் முழுவதும் தேய்த்து விட்டு கொஞ்சம் நேரம் சென்றபிறகு குளித்துவிடுங்கள். தைலத்தை பொறுத்து அது தலைக்கும் தேய்த்து குளிப்பதாக இருந்தால் குளிக்கலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இப்படி செய்து வந்தால் கொஞ்ச நாளில் எல்லாம் உங்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். இது எனது அனுபவபூர்வமாக நான் செய்தது உண்டு மற்றும் பல நண்பர்களுக்கும் நல்ல அனுபவம் இதில் இருக்கின்றது.
சுக்கிரனின் காரத்துவம் நன்றாக அதிகரித்து அதன் வழியாக நல்ல சொகுசான வாழ்வை கொடுக்கிறது. ஒரு சிலர் சுக்கிரனின் வாழ்வுக்காக தவிப்பவர்களாக இருப்பார்கள் அவர்கள் இதனை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sir, After started doing Pachai paraputhal, I feel Life is running in Right Way.
Thanks a lot for suggesting.
Best Regards,
Sathishkumar GS
Post a Comment