வணக்கம்!
ஒரு நண்பர் சார் தேர்தல் நேரம் இது. தேர்தலைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்டார்.
பொதுவாக நமது தளத்தில் அரசியல் பதிவு எழுதுவது கிடையாது. தனிநபர் மேம்படுத்த மட்டுமே வழி சொல்லுவது உண்டு. அரசியல் பக்கம் போவது எனக்கு அந்தளவுக்கு பிடிப்பது கிடையாது.
தனிநபரை மேம்படுத்தினால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். ஒவ்வொரு தனிமனிதனிலும் மாற்றம் ஏற்படும்பொழுது கண்டிப்பாக எது உண்மை என்பது புரிந்துவிடும். அந்த நேரத்தில் ஆட்சியிலும் நல்லவர்கள் வந்து நாட்டை மேம்படுத்துவார்கள்.
கிரகத்தை வைத்து அரசியல் பதிவை நாம் எழுதலாம் ஆனால் பிறர் இதனை அதிகம் எழுதுவார்கள் என்பதால் இதனை தவிர்த்து வருகிறேன். கிரகத்தின் கீழ் அனைத்தும் இயங்கினாலும் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மேம்படுத்தினால் மட்டுமே அந்த நாட்டில் மறுமலர்ச்சி என்பது ஏற்படும்.
தற்பொழுது நமது மக்களுக்கு ஒரு நல்ல ஆன்மீக ஆலோசனையை வழங்குவோம். இதன் வழியாக நாம் நல்ல முன்னேற்றத்தை கண்ட பிறகு அரசியல் பதிவை எழுதலாம்.
அடுத்த பதிவு 4 மணிக்கு
அடுத்த பதிவு 4 மணிக்கு
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment