வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தின் வழியாக வரும் 14/03/2016 திங்கள்கிழமை அன்று மாலை ஏழு மணியளவில் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி சந்நிதியில் தங்கரதம் இழுக்கப்படுகிறது.
ஏற்கனவே நான் சொன்ன மாதிரி சுவாமிமலையில் இருந்து தொடங்குவோம். பொதுவாக நமது ஜாதககதம்பத்தில் செல்வவளத்தைப்பற்றி அதிகம் எழுதியிருப்பேன். தற்பொழுது அதன் ஞாபகம் வந்தது. முதல் விசயம் அதாவது வெளியில் சொல்லப்படும் இந்த நிகழ்வு செல்வவளத்தை சார்ந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து இதனை ஆரம்பித்தேன்.
அறுபடை வீடான முருகன் வீட்டில் இருந்து ஒரு பிரசித்த பெற்ற தலத்தில் இதனை செய்வது நமது அம்மன் அருளால் கிடைக்கப்பெற்றது.ஒரு உண்டியலில் ஒரு ரூபாய் பணம் போடவேண்டும் என்றாலும் அது தெய்வஅருள் இருந்தால் மட்டுமே சாத்தியப்படகூடிய ஒன்று.
இரவு ஏழுமணிக்கு தங்கரதம் புறப்பாடு செய்யப்படுகிறது. நேரில் வரமுடிந்தால் வரலாம் அல்லது அந்த நேரத்தில் அமைதியாக இந்த நிகழ்வை நினைத்து பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும்.
உங்களின் பங்கு என்பது கண்டிப்பாக இதில் இருக்கின்றது. நீங்கள் ஜாதககதம்பத்திற்க்கு வந்த காரணத்தால் இதனை செய்யமுடிகிறது. பல நிகழ்வுகள் இனிமேலும் அம்மன் அருளால் நடைபெறும். அந்த வாய்ப்பை அம்மன் நமக்கு வழங்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Nalladhaga nadakkattum
Post a Comment