வணக்கம்!
ராகு பலத்தை இரவு நேரத்தில் நாம் பார்த்து வருகிறோம். காலையில் நாம் பார்த்த ஒரு மாதிரியான தசா நடைபெற்று வரும்பொழுது என்ன நடக்கும் என்பதைப்பற்றி பார்த்தோம். ராகு தசா ஒரு குடும்பத்தில் நடந்தது என்றால் ஒரே திருட்டு சம்பந்தமான விசயம் நடக்கும். பொருட்கள் திருடுபோகும்.
நம்ம ஆட்கள் கஷ்டப்பட்டு உழைத்து மேலே வருவார்கள். ராகு தசா வரும் கொஞ்சம் கையில் பணம் இருந்தால் தான் போதுமே நம்ம ஆட்களுக்கு பல வேலைகள் வந்துவிடும். இவர்கள் வெளியில் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
இவர்கள் ஏதாவது ஒரு கம்பெனி நடத்திக்கொண்டு இருப்பார்கள். அந்த கம்பெனியை கவனிக்க ஆள் இல்லாமல் கம்பெனியில் வேலை பார்க்கும் ஆட்களே அந்த கம்பெனியில் உள்ளவற்றை திருட்டுதனமாக விற்றுக்கொண்டு இருப்பார்கள்.
ராகு தசா நடக்கிறது கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள் என்று சோதிடர்காரன் சொல்லுவான் சோதிடக்காரன் பேச்சை கேட்பதற்க்கு அவர்களின் மூளை தயாராக இருக்காது. அழிந்து ஒன்றும் இல்லாமல் தெருவுக்கு வரும்பொழுது தான் அப்பொழுதே சொன்னான் அந்த சோதிடக்காரன் என்பார்கள்.
ராகு தசா மற்றும் ராகு பலம் உங்களின் ஜாதகத்தில் இருக்கும்பொழுது கொஞ்சம் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் கவனியுங்கள் அதுவே உங்களை பாதுகாக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment