வணக்கம்!
ராகு பலத்தைப்பற்றி இரவு நேரத்தில் பார்த்து வருகிறோம். மூன்றில் அல்லது ஒன்பதில் ராகு கேது அமர்ந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மாமனார் இருக்கமாட்டார்.
மாமனாரைப்பற்றி சொல்லுகிறேன் என்றால் காரணம் இருக்கின்றது. இன்றைய காலத்தில் பெற்றவர்களை விட மாமனார்களுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதால் இதனை சொல்லுகிறேன்.
மாமனார் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என்று கேட்கலாம். ஒரு சிலருக்கு மாமனார் இல்லை என்றால் அங்கு பெண் கூட எடுப்பதில்லை. அனைவரையும் சொல்லவில்லை ஒரு சிலர் இதனை எதிர்பார்க்கிறார்கள் என்பதால் இதனை சொல்லுகிறேன்.
ராகு கேது மூன்றில் அமரும்பொழுது இப்படிப்பட்ட நிலையை ஒரு சிலருக்கு ஏற்படுத்துகிறது. மூன்று ஒன்பது என்ற இடத்தில் ராகு கேது என்று வரும்பொழுது அது பித்ருதோஷம் எனப்படும்.
ஒருவருக்கு பித்ருதோஷம் இருந்தால் அந்த ஜாதகருடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு பெண் வீட்டுக்காரர்களிடம் கொடுத்தால் ஒரு வேலை அந்த பெண்ணிற்க்கு தந்தை இருந்தால் இந்த ஜாதகம் போனநேரம் பெண்ணின் தந்தை இறந்துவிடுவார்.
ராகு கேது அப்படி வேலை செய்யும் உங்களுக்கு பித்ருதோஷம் இருந்தால் பெண் பார்க்கும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக பாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment