வணக்கம்!
திருப்பூரில் உள்ள ஒரு நண்பரோடு மாசாணிஅம்மன் கோவிலுக்கு செல்லும்பொழுது அந்த நண்பர் ஒன்றை கேட்டார். சனி மற்றும் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பெரிய பாதிப்பு என்று சொல்லுகின்றனர். அது அப்படியா என்று கேட்டார். அது ஒரு உரையாடலாகவே சென்றது.
குரு ஒரு வருடகாலம் உச்சத்தில் இருந்தால் அது அனைவருக்கும் நல்லதையே வழங்கிவிடுகிறதா என்ன? சனி உச்சம் பெற்றால் இரண்டரை வருடகாலம் நல்லதை அனைவருக்கும் வழங்கிவிடுகிறதா என்ன?
பல ஜாதகங்களில் நான் பார்த்து இருக்கிறேன். சோதிடபுத்தகத்தில் சொல்லப்படுகின்ற விதிக்கும் ஜாதக கட்டத்தில் இருக்கின்ற கிரகத்தின் பலன் வித்தியாசப்படும்.
ஒரு உண்மையை சொல்லவேண்டும் என்றால் உலகத்தில் சுமார் ஐநூறு கோடி மக்கள் இருந்தால் அவர்களின் ஜாதகம் அடுத்தவர்களின் ஜாதகத்தோடு ஒத்து போவதில்லை. ஒவ்வொரு மனிதனையும் அவனுக்கு என்று தனித்தன்மையோடு கடவுள் படைகிறான். கண்டிப்பாக ஒருவர்க்கு உள்ள ஜாதகபலன் அடுத்தவர்களுக்கு கண்டிப்பாக மாறும்.
இரட்டை குழந்தைகள் பிறந்தால் கூட ஒருத்தர் போல் ஒருத்தர் இருப்பதில்லை. ஒவ்வொரு ஜாதகமும் வித்தியாசபலன் கொடுக்கிறது. ஜாதகபலன் கூட நம்மால் நூறு சதவீதம் மிகச்சரியாக சொல்லமுடியாது. இதனை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். புத்தகத்தில் சொல்லப்படுகின்ற பலன்கள் எல்லாம் ஒரளவு தான் இருக்குமே தவிர அது அனைத்தையும் சொல்லிவிடுவதில்லை.
சனி செவ்வாய் சேர்ந்தால் என்ன எது எதனையோடு சேர்ந்தால் என்ன அவர்களின் வாழ்க்கை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே சரியான பலன் கிடைக்கும். நான் சொன்னாலும் சரி எந்த புத்தகம் சொன்னாலும் சரி அது நூறு சதவீத பலனாக கண்டிப்பாக இருக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment