வணக்கம்!
சோதிடபுத்தகத்தில் நாம் தசாப்பலன்களைப்ற்றி படிக்கும்பொழுது ஒவ்வொரு புத்திக்கும் தகுந்தமாதிரி பலன்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் என்று சொல்லுவார்கள். அனுபவத்தில் பார்த்தால் வித்தியாசப்படுகிறது.
ஒருவருக்கு ஒரு தசா அடிக்க ஆரம்பித்துவிட்டால் அந்த தசா முடியும் வரை அடிக்க ஆரம்பித்துவிடும். பல பேரின் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன் ஒரு தசா ஆரம்பிக்கும்பொழுதும் அடிக்கிறது அது முடியும் வரை அடிக்கிறது.
ஏதோ ஒரு புத்தியில் சிறு நிம்மதி கிடைக்கும் என்றால் அதுவும் கிடையாது. அந்த தசா முடியும் வரை அடித்துக்கொண்டே இருக்கிறது. எந்த புத்தியும் அவர்களுக்கு நல்ல பலனை கொடுப்பதில்லை.
ஏன் இப்படி அடிக்கிறது என்றால் தசாநாதனுக்கு வலு இல்லை என்பது மட்டும் புரிகிறது. தசாநாதன் சிக்கலில் இருந்தால் அதாவது பலம் இல்லை என்றால் எந்த புத்திநாதனும் வேலை செய்யவதில்லை.
இப்படி பல நண்பர்கள் அடிப்பட்டு இருப்பீர்கள் அல்லது அடிவாங்கிக்கொண்டு இருப்பீர்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் ஜாதகத்தை என்னிடம் அனுப்பி வையுங்கள் அதற்கு ஒரு தீர்வை தரலாம். என்னிடம் காட்டமுடியாது நானே பார்த்துக்கொள்கிறேன் என்றாலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதனை பொதுபலனாக எழுதமுடியாது. தனிப்பட்ட ஜாதகத்தை வைத்து தான் அலசமுடியும். தனிப்பட்ட ஜாதகத்தை பார்க்கும்பொழுது அது என்ன பிரச்சினை என்பது தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment