Followers

Thursday, March 17, 2016

அம்மன் ஹோமம்


ணக்கம்!
          அம்மன் ஹோமத்தைப்பற்றி தற்பொழுது அதிக கேள்விகள் வந்துக்கொண்டு இருக்கின்றன. ஒரு சிலர் வேண்டுதல் பற்றியும் கேட்டனர். 

அம்மன் ஹோமம் காலையில் ஒன்பது மணிக்கு நடைபெறுகிறது. சிறிய அளவில் தான் இது நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. பெரிய அளவில் நடைபெறுவதற்க்கு ஒரு சில காலம் தேவைப்படுகிறது. 

அம்மன் ஹோமத்தைப்பற்றி நிறைய கேள்விகள் கேட்பது ஒரு வேளை பிராமணர்கள் போல் ஹோமம் செய்வீர்களா என்றும் கேட்டனர். பிராமணர்கள் செய்யும் ஹோமம் என்பது வெளியில் மந்திரம் சொல்லி செய்வார்கள்.

நமது அம்மன் ஹோமம் மந்திரம் சொல்லுவது உண்டு ஆனால் அதனை மனதிற்க்குள் மட்டுமே சொல்லுவது உண்டு. வெளியில் எந்த ஒரு மந்திரமும் சொல்லப்படுவதில்லை. வெளியில் சொல்லும் மந்திரங்களை விட மனதிற்க்குள் சொல்லும் மந்திரம் அதிக சக்தி வாய்ந்தது.

பலன் என்பது உடனுக்குடன் நடைபெறும் ஒரு சிறப்பு வாய்ந்த ஹோமம் இது. பல நண்பர்கள் இதில் பயன்பெற்று இருக்கின்றனர். இனிமேலும் பல நண்பர்கள் இதன் வழியாக பயன்பெறுவார்கள்.நான் ஊர்களில் இருக்கும் நாட்களில் தினமும் இது செய்யப்படுகிறது. அந்த நேரத்தில் நீங்கள் அம்மனை மனதார பிராத்தனை செய்யுங்கள்.

உங்களின் வீடுகளில் அம்மன் ஹோமம் செய்வது என்றால் என்னிடம் கேட்கலாம். உங்களின் வீடுகளுக்கு வந்து இதனை செய்து தரப்படும்.

அடுத்த பதிவு 1 மணிக்கு

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: