வணக்கம்!
ராகு தன்னுடைய தசாவில் அதிகம் சூதாட்ட வழியில் அதிகம் பணத்தை கொடுப்பவரா இருப்பார். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களின் ஜாதகத்தை பார்த்து ராகு தசாவாக இருந்தால் இதனை கொஞ்சம் செய்து பாருங்கள் என்று சொல்லுவது உண்டு.
ராகு கிரகம் ஒரு சில நேரத்தில் திடீர் பணவரவை கொடுத்துவிடும். தமிழ்நாட்டில் சூதாட்டம் இல்லை என்று நினைக்கிறேன். வெளிநாட்டில் இது நடைபெறுகிறது என்று சொல்லுவார்கள். வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நான் சொல்லுவது உண்டு.
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு அதாவது இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு ராகு பலம் இருக்கும். அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தில் இதுபோல உள்ள சூதாட்ட விளையாட்டில் பணத்தை போட்டு பாருங்கள். அதன் வழியாக ஒரு பெரிய பணம் கிடைக்க ராகு வழி செய்யும்.
வெளிநாட்டு நண்பர்கள் அனைத்தை பணத்தையும் போட்டுவிடாதீர்கள். நம் நாட்டில் டீ செலவு செய்வது போல் செய்துக்கொள்ளுங்கள். அதில் இருந்து ஏதாவது பணவரவு இருக்கும். ராகு பலத்தை பொறுத்து இது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment