வணக்கம்!
ராகு பலம் என்பது பற்றி இரவில் பார்த்து இருக்கிறோம். ராகு என்ன சார் பெரிய கிரகமாக என்று கேட்கலாம். உண்மையிலேயே பெரிய கிரகம் தான். இதனை அவ்வளவு எளிதில் நாம் எடை போட்டுவிடமுடியாது.
ராகுவின் பலத்தை நாம் சோதிடத்தில் கூட கணிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஏதோ கணித்து சொல்லுகிறோம் அவ்வளவு தான். உண்மையிலேயே அது அடிப்பதை கண்டுபிடிப்பது எளிதான காரியம் இல்லை.
ஒரு சில நண்பர்களுக்கு நான் சொல்லுவேன். இந்த விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லிவிடுவேன் அவர்கள் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள். கொஞ்ச நாளில் நான் எதனை சொல்லி அனுப்பி விசயத்தில் அவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். நான் ராகுவை வைத்து அந்த பலனை சொல்லியிருப்பேன்.
ஒவ்வொருவருக்கும் நான் சொல்லுவதை கூர்ந்து கவனித்துவிட்டு அந்த விசயத்தில் கவனமாக எடுத்துக்கொண்டு வழியை தேடிக்கொள்ளுங்கள்.கவனம் குறைந்தால் ராகு உங்களை சாப்பிட்டுவிடும். எல்லாவற்றிக்கும் நான் சொல்லிருப்பேன். ராகு கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் ராகுக்கு என்று தனியாக சொல்லுவேன் அதனை செய்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment