Followers

Wednesday, March 16, 2016

இரண்டு வீட்டுக்குரிய அதிபதியின் தசாபலன்


ணக்கம்!
          மகரலக்கினத்தை கொண்ட ஒருவருக்கு குரு கிரகம் மூன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டுக்குரிய அதிபதியாக வந்து அவருக்கு குரு தசா நடந்தால் அவருக்கு பலன் எப்படி வரும் என்றால் ஏதோ ஒரு வீட்டின் காரத்துவத்தை மட்டும் கொடுக்கிறது.

எப்படி பலனை கொடுக்கும் என்பதற்க்கு பல்வேறு விதிகள் சோதிடத்தில் சொல்லிருந்தாலும் அனுபவத்தில் பார்க்கும்பொழுது ஏதோ ஒரு வீட்டின் காரத்துவத்தை மட்டும் பலனாக கொடுத்துக்கொண்டு இருக்கின்றது. 

இரண்டு வீட்டிற்க்கும் உரிய பலனை கொடுப்பதில்லை. நாம் எதிர்பார்த்துக்கொண்டு இருப்போம் ஏதோ ஒரு வீடு யோகவீடாக இருக்கும் அது நமக்கு கொடுத்துவிடும் என்று எதிர்பார்ப்போம் ஆனால் அது கொடுக்காமல் இருக்கும்.

இரண்டு வீட்டுக்குரிய அதிபதியாக ஒரு கிரகம் இருந்தால் அது எந்த கிரகமாக இருந்தாலும் ஒரு வீட்டின் காரத்துவத்தை மட்டுமே வழங்கும். ஒரு சில ஜாதகத்தில் மட்டும் இரண்டு வீட்டுக்குரிய பலனை வழங்குகிறது. ஆயிரம் ஜாதகத்தில் ஒரு ஜாதகத்தில் அப்படி நடக்கலாம்.

தசாவைப்பொறுத்தவரை சோதிடபுத்தகத்தில் சொல்லியுள்ள விதிகள் நடப்பது குறைவாக தான் இருக்கின்றது. அனுபவத்தில் பல விசயங்கள் புதுமையாக நடக்கிறது. அந்தந்த நேரத்தைபொறுத்து நமது பலன் சொல்லுவது பலிக்கும்.

அடுத்த பதிவு மதியம் 2 மணிக்கு

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: