வணக்கம்!
என்னுடைய வாழ்வில் சுற்றி நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் நன்றாக உற்று கவனித்து அதனை சொல்லுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை தான் நான் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.
ஒருவர் சிவராத்திரி நாள் அன்று இறந்தால் அது மிக பெரிய கொடுப்பினை. சிவனோடு ஐக்கியமான ஒரு ஆத்மாவாக இருக்கும். எனக்கு தெரிந்த ஒரு பெண்மணி இன்று இறைவனடி சேர்ந்தார். மாலை நேரத்தில் இது நடந்தது.
பொதுவாக ஒருவருக்கு சாவு என்பது அவர் செய்யும் நல்ல செயலை அடிப்படையாக வைத்துக்கொண்டு தான் இருக்கும். நல்ல புண்ணியம் செய்து இருந்தால் அவருக்கு இயற்கையான முறையில் நடைபெறும். மிகவும் நல்ல முறையில் புண்ணியம் செய்து இருந்தால் இப்படிப்பட்ட நல்ல நாளில் அது கிடைக்கும்.
இன்று இறந்த பெண்மணியும் புண்ணியம் செய்வதைவிட தன்னுடைய நடவடிக்கையால் அவர்க்கு கிடைத்தது. அதாவது தன்னால் அடுத்தவர்களுக்கு ஒரு சிறு தீங்கு கூட செய்யவில்லை. அப்படிப்பட்ட ஆத்மாவிற்க்கு நல்ல ஒரு இறப்பை வழங்கி இருக்கிறான் இறைவன்.
சம்பந்தமே இல்லாமல் பிறர் மீது வெறுப்பை எல்லாம் காட்டுவதைவிட நம்முடைய வேலையை ஒழுங்காக கவனித்தாலே ஒரு நல்ல புண்ணியம் நமக்கு வந்து சேரும். புண்ணியம் செய்யவேண்டும் என்பதில்லை நம்மால் பிறர் எந்த ஒரு துன்பமும் அடையாமல் இருந்தாலே போதும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment