வணக்கம்!
ஒரு சில நண்பர்களின் குடும்பத்தில் ஒருவரைப்போல் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியான தசா நடைபெறும். அவர்களுக்கு வரும் பலனும் சமமான பலனாக வரும்.
ஒருவருக்கு குரு தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவரின் குடும்பத்தில் நான்கு நபர் இருந்து மூன்று நபர்களுக்கு குரு தசா நடந்தால் அந்த ஊரில் அந்த குடும்பத்தை சாமியார் குடும்பம் என்று தான் அழைப்பார்கள்.
அனைவருக்கும் குரு தசா என்கிறபொழுது வீட்டில் உள்ளவர்கள் பெரும்பாலும் கவனம் ஆன்மீகத்தை நோக்கி தான் இருக்கும். பெரும்பான்மையான தசாவாக இருக்கின்றபடியால் இது நடக்கின்றது. இன்றைய காலத்தில் குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு சுற்றபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களின் அனைவருக்கும் ஏறதாழ இப்படிப்பட்ட ஒரே மாதிரியான தசா நடைபெறும்.
ஒரு குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கி இருக்கின்றது என்றால் பெரும்பாலானவர்களுக்கு சனி தசா நடந்துக்கொண்டு இருக்கும். அவர்கள் அனைவரும் சேர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு மாதிரியான பலனை கொடுத்துக்கொண்டு இருக்கின்றது.
ஒரு குடும்பத்தின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் பெரும்பாலான கிரகங்கள் ஒரே மாதிரியாக அமைந்து இருக்கும். நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தசாவும் ஒரே மாதிரியாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment