Followers

Friday, March 18, 2016

அடிக்கும் தசாவை சமாளிப்பது எப்படி?


ணக்கம்!
          ஒரு தசா அடிக்கிறதா என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் கேள்வி கேட்டனர். தசா எங்களுக்கும் அடிக்கிறது அதற்கு ஒரு வழியை சொல்லுங்கள் என்று கேட்டனர்.

தசா அடிக்கிறது என்றால் கண்டிப்பாக அந்த நேரத்தில் ஒரு சரியான பரிகாரம் செய்யமுடிந்தால் செய்யுங்கள். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் அதற்குரிய வழிபாட்டு முறைகளை கையாளுங்கள். 

கண்டிப்பாக இதுவரை பல பதிவுகளில் நான் சொல்லிவந்து இருக்கிறேன். இந்த தசாவிற்க்கு இந்த பரிகாரம் வேலை செய்யும் என்று சொல்லிருக்கிறேன் அதனை நீங்களே செய்யும்படி சொல்லிருக்கிறேன் அதனை படித்துவிட்டு நீங்களே செய்துக்கொள்ளுங்கள்.

பரிகாரமும் செய்யமுடியவில்லை வழிபாடும் செய்யமுடியவில்லை என்றால் நீங்கள் அந்த காலகட்டத்தில் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் இருங்கள். இந்த காலத்தில் சும்மா இருக்கமுடியாது அதற்கு அந்த தசா காரத்துவம் காட்டும் வேலை மற்றும் தொழிலை தேர்ந்தெடுத்து செய்துக்கொள்ளுங்கள்.

ஒரு தசா காட்டும் காரத்துவத்தை நீங்கள் புரிந்துக்கொண்டு அதன்படி வாழ கற்றுக்கொண்டாலே போதும் எந்த ஒரு தசாவையும் நாம் சமாளித்து வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: