வணக்கம்!
ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் பிறர்களை விட ஒரு ஆசிரியர்க்கு அதிக முக்கியத்துவம் இருக்கின்றது. இதனை இன்றைய காலத்திலும் முக்கால்வாசி பேர் நல்லதாக செயல்புரிந்துள்ளார்கள். ஒரு சிலர் மட்டும் இதில் தவறாக இருக்கின்றனர்.
பல கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் தான் அதிகளவில் வட்டி தொழிலை செய்பவர்களாக இருக்கின்றனர். வட்டி விடுவது தவறு என்று நான் சொல்லவில்லை. எல்லா தவறும் ஏதாே ஒரு கிரகத்தால் வந்தாலும் ஆசிரியர்கள் இதனை செய்வது தான் கொஞ்சம் தவறுதலாக இருக்கின்றது.
பல ஆசிரியர்களின் குடும்பங்கள் உருபடவில்லை அவர்களின் வாரிசுகள் சரியில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கின்றதை நான் பார்த்து இருக்கிறேன். இன்றைய காலத்திலும் பல ஆசிரியர்கள் இந்த தொழிலை செய்கின்றனர். ஒரு சில ஆசிரியர்கள் தங்கள் பாடத்தை ஒழுங்காக நடத்துவதும் இல்லை. அதனாலும் அவர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது.
கடவுள் ஒரு நீதிமான் என்று சொல்லவில்லை. இதனை எல்லாம் அவர் பார்த்துக்கொண்டு இருந்தால் அவர் பையித்தியமாக மாறிவிடுவார். இயற்கையான ஒரு விதி இதனை எல்லாம் கவனித்து தீர்ப்பை வழங்குகிறது. செய்கின்ற வேலையை ஒழுங்காக செய்யவேண்டும் என்பது விதி அதனை செய்யவில்லை என்றால் அது தான் பிரச்சினை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment