வணக்கம்!
இராகு பலத்தைப்பற்றி பார்க்கலாம். இராகு என்றாலே பாம்பு கிரகம் தானே. நம்முடைய அனுபவத்தையே தருகிறேன். நான் வளர்ந்தது எல்லாம் கிராமபுறங்களில் தான். கிராமபுறங்கள் என்றாலே பாம்புக்கு குறைவு இருக்காது.
இளம்வயதில் நமக்கு சோதிடத்தைப்பற்றி எல்லாம் தெரியாது. நான் ரொம்ப மோசமான காட்டுபகுதியாக இருக்கும் இடத்திற்க்கு எல்லாம் சென்று இருக்கிறேன். அங்கு எல்லாம் பாம்பு என்பது ராஜ்ஜியமாக தான் இருக்கும். அங்கு சென்றப்பொழுது எல்லாம் என்னை பாம்பு கடித்து கிடையாது.
கிராமபுறங்களில் மிகவும் சுத்தமாக இருக்கும் இடத்தில் நான் ஒரு நாள் இருக்கும்பொழுது பாம்பு என்னை கடித்துவிட்டது. எங்களின் ஊரில் எல்லாம் பாம்பு கடித்தால் ஒரே தீர்வு மந்திரிப்பது மட்டுமே. ஒரு பாம்புக்கு மந்திரப்பவரிடம் சென்று காட்டினார்கள். அவர் ஒரு அரைமணி நேரத்திற்க்கு மந்திரித்தார் அதன் பிறகு வீட்டுக்கு செல்ல சொல்லிவிட்டார். நானும் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
கிராமபுறங்களில் எல்லாம் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் உடனே ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சோதிடரிடம் சென்றுவிடுவார்கள். எனக்கும் அப்படி தான் சாேதிடம் பார்க்க எனது அம்மா சென்றார். சோதிடர் சொல்லிருக்கிறார் ராகு இவருக்கு தற்பொழுது சரியில்லை அதனால் பாம்பு கடித்திருக்கிறது என்று சொல்லிருக்கிறார்.
விதித்தால் பாம்பு கடிக்கும் அல்லது மிதித்தால் பாம்பு கடிக்கும். நான் மிதிக்கவில்லை ஆனால் விதித்ததால் எனக்கு பாம்பு கடித்தது. ராகு பலம் என்பது இது தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment