Followers

Tuesday, March 1, 2016

அம்மன் பூஜை


வணக்கம்!
          அம்மன் பூஜை வரும் 10 தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். இந்த மாதம் மஹாசிவராத்திரி வருகின்றது. சிவன் கோவில்களில் மட்டும் விஷேசம் கிடையாது நம்ம அம்மனுக்கும் விஷேசமான நாள்.

சிவராத்திரிக்கு நாம் பூஜை செய்யலாம் ஆனால் அன்று பூக்களின் விலையை கருத்தில் கொண்டும் அதே நேரத்தில் நமது அம்மன் கோவிலும் விஷேசம் என்பதால் அதனை தவிர்த்து வேறு நாள் வைக்கலாம் என்று இருக்கிறேன்.

நம்ம அம்மன் பூஜை வழக்கமாக அதே நேரத்தில் அமைதியான ஒரு நாளில் எப்பொழுதும் வைப்பது வழக்கம். பிறர் யாரும் அம்மனை அதிகம் நினைக்காத நாளாக பார்த்து தேர்ந்தெடுப்பேன். 

பொதுவான ஒரு நாளாக வைப்பதற்க்கு அதாவது விஷேசமான ஒரு நாள் பார்த்து வைப்பதற்க்கு நம்மிடமும் கொஞ்சம் வசதி இருந்தால் செய்யலாம். அந்த நாளும் கைகூடும் என்று நம்புகிறேன். நான் ஊரில் இருக்கும் நாளில் அம்மனுக்காக விஷேசமான ஹோமம் செய்துக்கொண்டு இருக்கிறேன். அதனை தற்பொழுது தான் ஆரம்பித்துள்ளேன்.

அம்மன் பூஜைக்கு மட்டும் காணிக்கை செலுத்துங்கள். கொஞ்ச நாள்கள் சென்றவுடன் அதன் பிறகு தனிப்பட்ட ஹோமத்தில் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: