வணக்கம்!
ஒரு சில கிரகங்களை நாம் தீயகிரகங்கள் என்று நாம் ஒதுக்கி வைத்து இருந்தாலும் அந்த கிரகங்கள் இல்லை என்றால் நமக்கு பிரச்சினை தான் அதிகம் என்பதை யாரும் நினைத்து பார்ப்பது இல்லை.
ஒரு தீயகிரகம் மறைந்தால் அது நமக்கு நல்லதை செய்யமுடியாமல் போய்விடுகிறது. மறைவு ஸ்தானத்திற்க்கு செல்லும்பொழுது அந்த கிரகங்களில் உள்ள பலன் கிடைக்காமல் போய்விடுகிறது. சனி எட்டில் சென்று அமரும்பொழுது நமக்கு சனியின் பலன் கிடைக்காமல் நாம் எவ்வளவு அவதிப்படுகிறோம்.
நாம் எட்டிற்க்கு சென்றுவிட்டது அந்த கிரகம் நமக்கு கெடுபலனை தருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அது நமக்கு பலனை கொடுக்கமுடியாமல் சென்றுவிடுவதால் நமக்கு பிரச்சினை என்பது வருகிறது.
உண்மையில் கிரகங்கள் பாதிப்பு என்பது கொடுக்கவில்லை இறைவன் நமக்கு இந்த காலத்தில் இப்படிப்பட்ட பலனை கொடுக்கமுடியாது என்று விதி வைத்துக்கொண்டு இந்த கிரகங்களை மறைவுஸ்தானத்திற்க்கு அனுப்பிவிடுகிறது.
இறைவனின் விளையாட்டில் அடிபடுவது நாம். நாம் கிரகங்களை குறைச்சொல்லிக்கொண்டு இருக்கிறோம். எந்த கிரகங்களும் நமக்கு நன்மை தான் செய்கிறது. ஒன்பது கிரகங்களின் சக்தி இருக்கும்பொழுது மனிதன் நன்றாக இருக்கிறான். கிரகங்களின் சக்தி குறையும்பொழுது மனிதனுக்கு பிரச்சினை வருகிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
வித்தியாசமான சிந்தனை உண்மையும் அதான்
Post a Comment