வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தின் சார்பாக இன்று மாலை ஏழுமணியளவில் சுவாமி மலை சுவாமிநாத சுவாமி கோவிலில் தங்கரதம் இழுக்கப்படுகிறது என்பதை ஏற்கனவே நாம் பதிவில் தெரிவித்துவிட்டோம்.
இன்று மறுபடியும் தெரிவிக்கிறேன். பொதுவாக நமது நோக்கம் ஒருவரை எந்த ஒரு நிகழ்வுக்காவும் ஒரு இடத்திற்க்கு அழைப்பது கிடையாது. கூட்டம் கூட்டுவது கிடையாது ஏன் அப்படி செய்தேன் என்றால் ஒரு குடும்ப தலைவராக இருப்பவர் குடும்பபொறுப்பில் இருந்து இதில் கலந்துக்கொள்ள நினைப்பார்கள். ஒரு நாள் விடுப்பு எடுக்க நேரிடும்.
நம்மால் அடுத்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்று நினைப்பேன். இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்பது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நிகழ்வாக உங்களுக்கு இருக்கும். நீங்கள் கலந்துக்கொள்வதாக இருந்தால் தாராளமாக வந்து கலந்துக்கொள்ளலாம்.
ஜாதககதம்பத்தைப்பற்றி விளம்பரப்படுத்த இதனை செய்யவில்லை. அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும் என்பதற்க்காக இதனை செய்கிறேன். அடுத்த நிகழ்வுகள் எல்லாம் முன்கூட்டியே தெரிவித்துவிடுகிறேன். உங்களின் பயணமும் திட்டமிட்டபடி இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment