வணக்கம்!
ஒரு நல்ல ஆன்மீகவாதிக்கு குரு கிரகம் தனித்து நிற்க்கும். குரு கிரகம் மறைவில் நின்றால் கூட அந்த கிரகம் தனித்து நின்றுவிட்டால் சிறந்த ஆன்மீகவாதியாக மாறிவிடுவார்கள்.
குரு கிரகத்தோடு தீயகிரகங்கள் இணைந்துவிட்டால் அவரின் ஆன்மீகவாழ்வு அந்தளவுக்கு சிறக்காது. முழுமையாக கற்றுக்கொள்ளமுடியாது. நமது தந்தை நல்லது செய்து இருந்தால் குரு கிரகம் தனித்து நிற்க்கும்.
பல குடும்பங்களில் ஏதாவது தீவினையை இழுத்து வைத்திருப்பார்கள். தீவினையை இழுத்தாலே அவர்களின் வாரிசுகளுக்கு குரு கிரகம் கெட்டுவிடும். குரு கிரகம் தனித்து நிற்கவேண்டும் அதனோடு சுபர்கள் சேரலாம். தீயகிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல.
ஒரு மனிதனுக்கு ஆன்மீகம் மட்டும் இல்லை. அவனின் வாழ்வும் எந்தவித சிக்கலும் இல்லாமல் செல்லவேண்டும் என்றால் அவனுக்கு குரு கிரகம் நான் சொல்லுவது போல் இருக்கவேண்டும்.
குரு கிரகம் கெட்டது என்றால் அந்த ஆளோடு பழகுவது கூட கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவரால் நமக்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு செய்து கூறவும்.
Post a Comment