வணக்கம்!
ராகு பலத்தைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் இன்று ஒரு தகவலை பார்க்கலாம். ராகு கேது மூன்று ஒன்பதில் அமரும்பொழுது அது பித்ருதோஷம் என்கிறோம். இது கெடுதல் என்று சொன்னாலும் அதிலும் ஒரு நன்மை இருக்கின்றது.
மூன்றாவது வீடு என்பது தைரியஸ்தானமாக வருகின்றது அல்லவா. இதில் அமரும் ராகு கேதுக்கள் ஜாதகருக்கு தைரியத்தை வழங்கிவிடும். ஒருவருக்கு தைரியம் என்பது இருந்தாலே போதும் அவர் பல வேலைகளை எளிதில் செய்துவிடுவார்.
இப்படிப்பட்ட அமைப்பில் இருக்கும் ஜாதகர்களிடம் பிறர் வம்புக்கு இழுத்தால் அவர்கள் உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். பொதுவாக இவர்கள் அமைதியாக தான் இருப்பார்கள். சாது மிரண்டால் என்ன ஆகும் அதுபோல் தான் இவர்களின் செயலும் இருக்கும்.
இவர்களுக்கு ஏன் இப்படிப்பட்ட தைரியம் வருகின்றது என்றால் முன்ஜென்மத்தில் இவர்கள் கொலை செய்தகாரணத்தால் இவர்களுக்கு தைரியம் என்பது இயற்கையாகவே இருக்கும்.
முன்ஜென்மத்தில் விட்டு அந்த வீரத்தை தற்பொழுது உள்ள ஜென்மத்திலும் தொடர்ந்து வருகின்றது என்பது மட்டும் உண்மையாக இருக்கின்றது. பல்வேறு ஜாதகங்களில் இதனை நான் கண்டு இருக்கிறேன்.
தற்பொழுது உள்ள ஜென்மத்தில் இவர்கள் கொலை எல்லாம் செய்யமாட்டார்கள். வீரம் என்பது இயற்கையாக இருக்கும் என்பது மட்டுமே உண்மை. அதனை வைத்து பயமுறுத்துவதற்க்காக பயன்படுத்துவார்கள்.
இன்று கோயம்புத்தூர் பயணம். நாளை மற்றும் நாளை மறுநாள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
இன்று கோயம்புத்தூர் பயணம். நாளை மற்றும் நாளை மறுநாள் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment