வணக்கம்!
என்னை தேடி வரும் நண்பர்கள் ஒரு சிலர் நிறைய சொல்லிவிட்டு சார் என்னை தவறுதலாக பார்க்காதீர்கள் என்று சொல்லுவார்கள். ஏதோ ஒன்றை சொல்லுவதற்க்கு இதனை சொல்லுகின்றனர் என்பது மட்டும் புரிகிறது.
உங்களை நான் நல்லவர் என்று நினைக்கவேண்டும் என்று சொல்லுகின்றனர். என்னை பொறுத்தவரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்களை நான் தவறானவர் அல்லது நல்லவர் என்று எதிர்பார்ப்பதில்லை.
ஒரு மனிதனை படைக்கிறான் இறைவன் என்றால் ஒன்பது கிரகத்தின் பங்கு இல்லாமல் படைப்பதில்லை. நல்ல கிரகங்கள் மட்டும் மனிதர்களை படைத்து இருந்தால் நாட்டில் பிரச்சினை என்பதே இருக்காது. தீயகிரகங்களும் சேர்ந்து இருந்த காரணத்தால் பிரச்சினை இருக்கின்றது.
ஒரு சோதிடனுக்கு கண்டிப்பாக தெரியும் அனைவரும் கிரகத்தின் கீழ் இருப்பவர். அதனால் ஒரு மனிதனை ஒரு சோதிடன் எந்த காலத்திலும் இவன் நல்லவன் அவன் கெட்டவன் என்று தீர்மானிப்பது கிடையாது.
நீங்கள் யார் என்ன என்பதை எல்லாம் நான் கவனிப்பது கிடையாது. இந்த கிரகத்திற்க்கு இப்படி செய்யும் இதனை பார்த்து நடந்துக்கொள்ளுங்கள் என்பது மட்டுமே. அதனை நீங்கள் ஏற்றுக்கொண்டு அதன்படி நடந்தால் நல்லது. நான் ஏற்கமாட்டேன் நான் இப்படி தான் இருப்பேன் என்றால் அது உங்களின் பாடு.
ஒரு சிலருக்கு கெட்ட கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் அவர்கள் கொஞ்சம் கெடுதல் சிந்தனையோடு வலம்வருவார்கள். ஒரு சிலருக்கு நல்ல கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் அவர்கள் நல்ல சிந்தனையோடு வலம் வருவார்கள். இதனை நாம் அறிந்து இப்படி செல்லுங்கள் என்பதை மட்டும் சொல்லுவது எங்களின் வேலை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment