Followers

Thursday, March 24, 2016

தசாவை கவனியுங்கள்


ணக்கம்!
          தசாவைப்பற்றி சொன்னவுடன் பத்து நண்பர்கள் அவர்களின் ஜாதகத்தை அனுப்பி விளக்கம் கேட்டனர். மீதி உள்ள நண்பர்கள் அவர்களே பார்த்துக்கொண்டுவிட்டனர் என்று நினைக்கிறேன் அல்லது வேறு ஒரு சோதிடர்களிடம் காட்டிவிளக்கம் கேட்டு இருக்கலாம்.

ஒரு சில விசயத்தைப்பற்றி நாம் சொல்லி தான் ஆகவேண்டும். தசாவைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாக தான் இருக்கின்றது. அந்த விழிப்புணர்வு குறைவதற்கும் கடவுள் காரணமாக இருக்கலாம். எதனை வைத்து நம்மை கடவுள் பந்தாடுகிறாரோ அதனைப்பற்றி வெளியில் தெரியாமல் போய்விடும்.

உங்களின் தசா உங்களின் வாழ்வை தீர்மானிக்கிறது என்பது மட்டும் உண்மை. ஒவ்வொரு தசாவும் உங்களின் வாழ்வை ஒன்று மேம்படுத்தும் அல்லது புரட்டிபோட்டுக்கொண்டிருக்கும். வாழ்வை மேம்படுத்தினால் நல்லது. வாழ்வை பிரச்சினைக்குள்ளாகினால் மட்டுமே நீங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு நடக்கும் தசா அதிபரி யார் என்று பாருங்கள். தசா அதிபதி எந்த வீட்டில் இருந்து தசாவை நடத்துக்கிறார் என்பதை பாருங்கள். தசா அதிபதியின் பலன் என்ன என்பதை தீர்மானித்துவிட்டு அதற்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்தால் நடக்குமா என்று மனதைப்போட்டு குழப்பிக்கொண்டிருக்காமல் தசாவிற்க்கு இதனையாவது செய்யவேண்டும் என்ற நினைப்போடு காரியத்தில் இறங்குங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: