வணக்கம்!
ஒரு குழந்தை பிறப்பதற்க்கு முன்பு அதனிடம் கடவுள் கேட்பாராம். உன்னுடைய கர்மா கணக்கு வழியாக இந்த பிறப்பு தரப்படுகிறது உனக்கும் உன்னுடைய தாய்க்கும் கர்மா என்று சரியில்லை. உன்னுடைய தாய் உன்னால் இறக்கபடவேண்டும் என்று இருக்கிறது.
உனக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். உன்னுடைய கர்மாவின் கணக்குப்படி உனக்கு தாய் வேண்டுமா அல்லது தாய்பால் வேண்டுமா என்று கேட்பாராம்.
அந்த குழந்தை எனக்கு தாய் வேண்டும் எனக்கு தாய்பால் வேண்டாம் என்று சொல்லி வரத்தை வாங்கிக்கொண்டு வந்துவிடுமாம். அந்த குழந்தை பிறந்த நாளில் இருந்து தாய்பாலை குடிக்கவே குடிக்காது. தாய் அந்த குழந்தையோடு இருக்கவேண்டும் என்ற காரணத்தால் அது குடிக்காது.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்து சோதிடம் பார்க்கும் சோதிடர்களிடம் பால்குடிக்காத குழந்தையின் ஜாதகத்தை காட்டினால் அவர் சொல்லுவார் இந்த குழந்தை தாய்பாலை குடிக்காது என்பார்.
இப்படிப்பட்ட ஜாதகத்தை நேற்று பார்த்தேன். குழந்தை அல்லவா அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி ஒரு சின்ன பரிகாரத்தை செய்தேன். மூன்று நாளில் பால்குடிக்கும் என்று சொல்லி அனுப்பினேன். கண்டிப்பாக பால் குடிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment