வணக்கம்!
ஒரு தெய்வ வழிப்பாட்டை விட உங்களின் மூத்தோர்களாகிய உங்களின் தாத்தா மற்றும் உங்களின் குடும்பத்தில் உள்ள முன்னோர்களை வணங்கினால் நீங்கள் மிகஉயர்ந்த இடத்திற்க்கு செல்லமுடியும்.
தெய்வவழிபாட்டை விட இந்த வழிபாடு அதிகம் கைக்கொடுகிறது. அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன். பல ஊர்களில் தெய்வங்களே அந்தந்த ஊர்களில் உள்ள முன்னோர்கள் இருக்கின்றனர். அவர்கள் அவர்களின் குலத்தை காத்துக்கொண்டு வருகின்றனர்.
முன்னோர்களை எப்படி வணங்குவது என்று கேட்கதோன்றும். ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து வணங்கி வருவீர்கள் இது பொதுவான வழிபாடு.
உங்களின் குடும்பத்தில் ஏதாவது ஒரு விழா நடந்தால் அந்த விழாவிற்க்கு உங்களின் வீட்டில் சாமி கும்பிடுவீர்கள் அல்லவா அந்த படையல் தான் மிக மிக முக்கியம்.
எப்படி இது முக்கியம் என்று கேட்கிறீர்களா அவர்களுக்கு பிடித்தமான உணவை மற்றும் உடைகளை எடுத்து வணங்குவார்கள் அல்லவா. அந்த காரணத்தால் அந்த வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment