வணக்கம்!
எங்கள் பகுதியில் தற்பொழுது காமாண்டி திருவிழா நடைபெற்று வருகின்றது. காமாண்டி திருவிழா என்றால் மன்மதன் கோவில் திருவிழா. மன்மதனுக்கு என்று கோவில் அமைத்து அதற்கு திருவிழா செய்வார்கள்.
மன்மதன் கோவில் தெருவிற்க்கு தெரு எங்கள் பகுதியில் இருக்கும். பெரிய கோவில் எல்லாம் கிடையாது. ஊருக்கு நடுபகுதியில் ஒரு இடத்தில் ஒரு விளக்கு கல் வைத்து அதனை மன்மதனாக வழிபட்டுக்கொண்டு வருவார்கள்.
காமன் பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் தொடங்கி வளர்பிறையில் கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வானது, 'காமன் பண்டிகை திடல்' அல்லது 'காமன் பண்டிகை திட்டு' என்று வழங்கப்படும் பொது இடத்தில் நடைபெறும்.
காமதகனம் என்ற நிகழ்வு பங்குனி உத்திரம் அன்று (மன்மதனை எரிக்கும் நிகழ்வு )நடைபெறும். மிகவும் சிறப்பாக இங்கு திருவிழா நடைபெறும். ரதி மன்மதன் அலங்கரித்து ஊர்வலமாக எல்லாம் எடுத்து செல்வார்கள். இதனை எல்லாம் நேரில் பார்த்தால் தான் இது தெரியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment