வணக்கம்!
நாளை பங்குனி உத்திரம். முருகனுக்குரிய நாளாக இருந்தாலும் ஒவ்வொரு குலதெய்வத்திற்க்கும் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரக்கூடிய ஒரு நாளாக இருக்கின்றது.
நீங்கள் இருக்கும் பகுதியில் அருகில் முருகன் கோவில் இருந்தால் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். புகழ்பெற்ற கோவிலுக்கும் சென்று வரலாம். நாளை குலதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை செய்யலாம். மாதம்தோறும் செய்து வருபவர்கள் செய்வார்கள். புதிதாக செய்பவர்கள் நாளையில் இருந்து ஆரம்பிக்கலாம்.
பல பேர் குலதெய்வ கோவிலுக்கு சென்று அன்னதானம் செய்வார்கள். உங்களின் வழக்கம் அன்னதானம் செய்வது என்றால் நீங்கள் தாராளமாக செய்யுங்கள்.
முருகனுக்கு உரிய நாளில் மிகுந்த சுத்தமாக உங்களின் வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டில் தினந்தோறும் செய்யும் பூஜையை செய்யுங்கள்.நாளை விரதம் இருந்து முருகனை வணங்கிவந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment