Followers

Wednesday, March 2, 2016

ராகு பலம்


ணக்கம்!
         ராகு பலத்தைப்பற்றி பார்க்கலாம். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு ஐந்தாவது வீட்டில் இருந்தால் அதனை நாம் பித்ருதோஷம் என்று சொல்லிவிடுவோம். பூர்வபுண்ணியத்தில் ராகு இருப்பதால் பித்ருதோஷத்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லுவோம்

பூர்வபுண்ணியத்தில் ராகு இருக்கும்பொழுது குழந்தைபாக்கியம் கிடைக்காது என்று சொல்லமுடியாது. அதே நேரத்தில் இதனை பித்ருதோஷம் என்று சொல்லமுடியாது. அவர்வர்களின் ஜாதகத்தை பொறுத்து இது பித்ருதோஷமா என்று முடிவு செய்யவேண்டும்.

நான் பல நண்பர்களின் ஜாதகத்தில் பார்த்து இருக்கிறேன். ஐந்தாவது வீட்டில் ராகு இருந்தால் அவர்களுக்கு ஆண்குழந்தை அதிகம் பிறக்கிறது. நூற்றுக்கு தொண்ணூறு ஜாதகத்தில் ஆண்குழந்தை பிறக்கிறது. ஒரு சிலருக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

ராகு கிரகம் அதிகம் ஆண்குழந்தைகளை கொடுக்கிறது. ஐந்தில் ராகு இருக்கின்றது அதனால் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்பதில்லை. உங்களின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொண்டு இதனை செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: