வணக்கம்!
ஒருவருக்கு ராகு பலம் பெற்றால் அவர் அதிகம் சம்பாதிப்பது சூதாட்டம் போன்ற விசயமாக இருக்கும். திடிர் அதிர்ஷ்டம் எல்லாம் இவரின் கருணையால் கிடைக்கிறது.
ராகு என்றாலே நாம் பயப்படுவோம். தீயகிரகங்கள் என்றால் அது தீயவை அதிகம் தரும் என்று பயப்படுவது உண்டு ஆனால் தீயகிரமான ராகு கூட நிறைய நல்லதையும் தரும்.
ராகு கிரகம் பலப்படும்பொழுது நிறைய தொடர்புகள் கிடைத்துவிடுகிறது. இன்றைய காலத்தில் ஒருவனுக்கு நிறைய நல்ல தொடர்புகள் கிடைத்தாலே போதும் ஒருத்தன் ஆண்டியாக இருந்தாலும் அவன் கோடிஸ்வரனாக மாறிவிடுவான்.
என்னிடம் ஒரு சில நண்பர்கள் வருவார்கள். எப்படியும் நான் பணக்காரானாக மாறவேண்டும் அதற்கு வழி சொல்லு என்று கேட்பார்கள். அவர்களிடம் நான் சொல்லுவது ராகுவை நன்றாக வணங்கிவா உனக்கு பணம் கிடைக்கும் என்று சொல்லுவேன்.
ராகு கிரகத்திற்க்கு என்று ஒரு சில வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அந்த வழிபாட்டு முறைகளை செய்தாலே போதும் பணம் வரும். ராகுவின் பலம் அப்படிப்பட்டது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அந்த வழிபாட்டு முறையை தாங்கள் கூறலாமே...
Post a Comment