வணக்கம்!
ஒரு சிலருக்கு புரிந்துக்கொள்ளாத தன்மையால் ஒரு சில பிரச்சினை வரும். கணவன் மனைவிக்குள்ளேயே இப்படிப்பட்ட புரிந்துக்கொள்ளாத தன்மையால் பிரச்சினை வருவது உண்டு.
ஒரு வார்த்தை சொல்லிருப்பார்கள் அதனை ஒருவர் தவறாக எடுத்துக்கொண்டு அதனை பிரச்சினையாக்கிவிடுவார்கள். கடுமையான சண்டை கூட இதனால் ஏற்படுவது உண்டு.
இப்படிப்பட்ட பிரச்சினைக்கு எல்லாம் காரணம் சந்திரன் எட்டில் இருக்கும்பொழுது நடக்கும். ஒரு சிலருக்கு சந்திரன் ராசியை கடக்கும்பொழுதும் இது நடைபெறும். மனதுக்காரகன் மனதை மங்க வைத்து இப்படிப்பட்ட பிரச்சினைகளை கிளப்பிவிடுவது உண்டு.
சந்திரன் ஒவ்வொரு நாளும் எங்கு சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதன்படி நாம் பேசினாலே போதும். முக்கால்வாசி பிரச்சினையை நாம் சமாளித்துவிடலாம். அதனைவிட்டுவிட்டு நாம் இஷ்டப்படி பேசினால் நமக்கு தான் கஷ்டத்தை ஏற்படுத்திவிடுவார்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment