வணக்கம்!
அன்னதானத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன் அது தள்ளிபோகிக்கொண்டு இருந்தது. இன்று அதற்க்கான நேரம் வந்தது சொல்லுகிறேன்.
அன்னதானம் செய்யலாம் அதே நேரத்தில் கண்ட இடத்திலும் அன்னதானத்தை சாப்பிடுவது என்பது கூடாது. ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் அவன் அவனின் கர்மத்தை நாம் வாங்குவது போல் சாப்பிட்டுவிடகூடாது.
கோவில்களில் அன்னதானம் செய்யும்பொழுது வேண்டுமானால் சாப்பிடலாம். கோவில்களில் அன்னதானத்தை படைத்துவிட்டு மக்களுக்கு கொடுப்பார்கள். கோவில்களில் உள்ள சக்தி அவர்களின் கர்மா நமக்கு வருவதை தடை செய்துவிடும் கோவில்களில் உள்ள நல்ல சக்தி நமக்கு கிடைக்கும்.
இன்று பல தலைவர்கள் ஏன் தெருவில் இருக்கும் வார்டு உறுப்பினர்களின் பிறந்த நாளுக்கு எல்லாம் அன்னதானம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனை சாப்பிட்டால் அவன் தான் வாழ்வனே தவிர நாம் நன்றாக வாழமுடியாது.
நீங்களே அன்னதானம் செய்தாலும் அதனை கோவில்களின் வழியாக செய்யுங்கள். கோவில்களின் வழியாக செய்யும்பொழுது உங்களுக்கு கூடுதலாக புண்ணியம் கிடைக்கும்.
நீங்களே அன்னதானம் செய்தாலும் அதனை கோவில்களின் வழியாக செய்யுங்கள். கோவில்களின் வழியாக செய்யும்பொழுது உங்களுக்கு கூடுதலாக புண்ணியம் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment