வணக்கம்!
ஒருவருக்கு ஏதோ ஒரு நோயால் பாதிக்கப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம் அவருக்கு அந்த நோயை குணப்படுத்த மருந்து கொடுத்தால் அந்த மருந்தால் மேலும் ஆபத்தை சந்தித்தால் அவருக்கு ராகு கிரகம் சரியில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் ஒருவருக்கு நோய் வரக்கூடாது என்பது தான் நமது பிராத்தனை ஆனாலும் காலசூழல் காரணமாக நமக்கு நோய் வருகின்றது என்றாலும் அந்த நோய்க்கு மருந்து எளிதாக கிடைக்கவேண்டும். குறைந்த விலையில் கிடைக்கவேண்டும் நாம் அந்த மருந்தை சாப்பிட்டால் நமக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கவேண்டும்.
ஒரு சிலருக்கு ராகு கிரகம் இரண்டாவது வீட்டில் இருக்கும். அந்த கிரகம் ஒரு சில நேரத்தில் வில்லங்க வேலையை செய்துவிடும் நாம் ஏதோ ஒரு வியாதிக்கு மருந்தை எடுத்தால் இந்த ராகு அந்த மருந்தை விஷமாக மாற்றிவிடும்.
ஒரு சிலர் இறந்துக்கூட போய் இருக்கிறார்கள். ராகு மற்றும் கேது விஷத்தை உடலில் செலுத்தவதில் வல்லவர் என்பதால் இதில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment