வணக்கம்!
சோதிடர், ஆன்மீகவாதி, மந்திரவாதி, தந்திரவாதி, யந்திரவாதி, மகான், யோகி, சித்தர் என்று இன்னுமும் எத்தனை பெயரில் சொல்லி அழைக்கும் அனைவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளுக்குள் இருக்கும் ஆனால் இவர்கள் ஊருக்கு உபதேசம் செய்துக்கொண்டு இருப்பார்கள்.
நான் சோதிடனாக இருந்தால் முதலில் எனக்கு வரும் பிரச்சினையை தீர்க்க எனக்கு தெரிந்து இருக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் நான் உங்களுக்கு தீர்வை வழங்க தகுதியற்றவனாகிறேன்.
முக்கால்வாசி சோதிடர்களின் குடும்பங்களை உற்று நோக்கினால் பெரிய பிரச்சினையை அவர்களின் குடும்பங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும். அவர்களால் அவர்களின் குடும்பங்களுக்கு தீர்வை கொடுக்கமுடிவதில்லை.
ஒரு சில சோதிடர்களை பார்த்தால் ஆயிரம் திருமணத்தை நடத்தி வைத்துக்கொண்டு இருப்பார்கள் ஆனால் அவருக்கு ஒரு திருமணம் நடக்காமல் இருக்கும்.
இவர்களுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்பதை நீங்கள் கேட்டால் நாங்கள் பல பேருக்கு சோதிடம் சொல்லுகிறோம் அதனால் அவர்களின் கர்மா எங்களுக்கு வருகின்றது என்று ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
உண்மை என்ன என்றால் இவர்களின் பிரச்சினையை இவர்களுக்கு தீர்க்கவழி தெரியவில்லை என்பது மட்டும் உண்மை. பல பேருக்கு இவர்கள் செய்துக்கொண்டு இருக்கின்றார்களே என்று நீங்கள் கேட்க நினைப்பீர்கள். காக்கா உட்கார பழம் விழுந்த கதை தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment