வணக்கம்!
தாத்தா பாட்டியை பற்றி ஒரு சில கேள்விகள் வந்தன. தாத்தா பாட்டிக்காவது நாம் எழுதவேண்டும் என்று உடனே காலையிலேயே இதனை தந்துவிட்டேன்.
ராகு கேது பாட்டன் பாட்டியை குறிக்கும் கிரகமாக இருக்கின்றது. பாட்டன் பாட்டியின் ஆயுளை தீர்மானிக்ககூடிய கிரகங்களாகவும் ராகு கேது இருக்கின்றது.
ஒருத்தருக்கு பேரன் பேத்தி பிறந்தால் அவர்களின் ஜாதகத்தை எடுத்து உடனே பார்த்துவிடவேண்டும். பிறந்த குழந்தையின் ஜாதகத்தை நாம் ஒரு வருடம் சென்று தான் பார்ப்போம் ஆனால் அந்த ஒரு வருடத்திலேயே பல பேருக்கு வேலை செய்துவிடும். தாத்தா பாட்டிக்கு ஏதாவது நோயை கொடுத்துவிடும்.
தாத்தா பாட்டிக்கு இறப்பை தீர்மானிக்கும் கிரகங்களாக இருப்பதால் ராகு கேதுவின் நகர்வை நன்றாக கவனித்து பரிகாரத்தை செய்துவிடவேண்டும். ஒரு சில பரிகாரங்களை தாத்தா பாட்டியின் ஆயுளை அதிகரிக்க செய்யும் அதனை பார்த்து செய்துக்கொள்ளுங்கள்.
தாத்தா பாட்டிக்கு பரிகாரம் செய்யும்பொழுது அவர்களை வைத்து செய்யுங்கள். அவர்களின் மனம் நன்றாக குளிர்ந்து உங்களை ஆசீர்வதிக்கும். இந்த ஆசீர்வாதம் உங்களை நீண்டநாள்கள் நன்றாக வாழ வழிவகுக்கும். பாக்கியஸ்தானத்தை வலுபடுத்த இது ஒரு நல்ல வழி.
அடுத்த பதிவு 2 மணிக்கு மேல்
அடுத்த பதிவு 2 மணிக்கு மேல்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment