வணக்கம்!
நாம் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை சோதிடத்தில் பத்தாவது வீட்டை வைத்து தான் சொல்லவேண்டும். உண்மையில் பத்தாவது வீட்டை மட்டும் வைத்து தொழில் இது தான் என்று ஒருவருக்கு சொல்லி அவர் அந்த தொழிலை தேர்ந்தெடுத்து செய்தார் என்றால் பெருமையான ஆட்கள் தொழிலில் தோல்வியை தான் சந்திப்பார்கள்.
பொதுவாகவே சோதிடத்தைப்பொறுத்தவரை எல்லாம் கிரகங்களும் எல்லா வீடுகளும் வேலை செய்தாலும் தசாநாதனின் வேலை அதிகமாக இருக்கும்.தசாநாதன் தலைவர் போல் செயல்பட்டுக்கொண்டு இருப்பார்.
ஒருவருக்கு ஒரு தசா வேலை செய்துக்கொண்டு இருந்தால் அந்த தசாநாதன் யார் என்பதை பார்த்துவிட்டு அவரின் காரத்துவம் உடைய வேலைகளில் இறங்கினால் தோல்வி என்பது இருக்காது. வெற்றியை எப்படியும் தந்தே தீரும்.
உங்களுடைய ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் தசாநாதன் யார் என்பதை பார்த்துவிட்டு அவரின் காரத்துவம் உடைய காரியங்களில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment