வணக்கம்!
ஒரு சில பேரை நீங்கள் பார்த்து இருக்கலாம். ஊரில் அவன் எந்த வேலைக்கும் சரியில்லை என்பார்கள். அவன் ஒரு மோசமான ஆள் என்று சொல்லுவார்கள். எந்தளவுக்கு திட்டவேண்டுமோ அந்தளவுக்கு திட்டி இருப்பார்கள்.
அவனுக்கும் ஒரு வாய்ப்பை கடவுள் கொடுப்பார். ஏதாவது ஒரு தசா வந்து அவனை தூக்கி நிறுத்திவிடும். ஊரே அவனின் பேச்சை கேட்கிற அளவுக்கு இருக்கும். இது எல்லாம் எப்படி என்றால் அவன் மோசமான காலகட்டத்தில் அவனுக்கு மோசமான தசா நடந்து இருக்கும். ஒரு நல்ல தசா வந்தவுடன் அவனின் செயல் மாறிவிடும்.
கிரகங்கள் ஒருவனை தூக்கி நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அவனை யார் தடுத்தலாம் அவனின் வெற்றியை நிறுத்தமுடியாது. கிரகங்களின் வலிமை அப்படிப்பட்டது.
அனைவருக்கும் தசாநாதன் வேலை செய்வான் ஆனால் அவன் எப்படி வேலை செய்கிறான் என்பதை தான் நாம் பார்க்கவேண்டும். வேலை செய்கிறான் என்றால் ஒன்று அடித்து கீழே தள்ளவேண்டும் அல்லது உயர்த்திக்கொண்டு இருக்கும். ஒரு சிலருக்கு பொதுவில் இருந்துக்கொண்டு மவுனம் சாதிப்பார்.
உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் தசாநாதன் எப்படி சென்றுக்கொண்டு இருக்கிறான் என்று பாருங்கள். அதாவது எந்த வீட்டில் அமர்ந்து செல்லுகிறான். தசாநாதனுக்கு எப்படிப்பட்ட கிரகங்களின் பார்வை கிடைக்கிறது என்று பாருங்கள். மறைவு வீட்டில் இருந்து தசாநாதன் தசாவை நடத்துகிறானா என்று பாருங்கள். இதனைபார்த்துவிட்டு அதன் பிறகு எப்படி உங்களின் வாழ்வு வேண்டும் என்பதை பாருங்கள். அதற்கு தசாநாதன் ஒத்துழைப்பு இருக்கின்றதா என்று பாருங்கள்.
உங்களுக்கு தசாநாதன் ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட தசாநாதனுக்கு ஏதாவது பரிகாரம் செய்யமுடியுமா என்று பாருங்கள். பரிகாரம் செய்யமுடியவில்லை என்றால் தசாநாதனின் காரத்துவம் காட்டும் விசயத்தில் உங்களின் மனதை செலுத்துங்கள். ஒரளவு தசாநாதன் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment