Followers

Wednesday, March 16, 2016

அனுபவம் கற்றுக்கொடுத்த சோதிடகலை


ணக்கம்!
          நான் சோதிடம் பார்க்கும்பொழுது எனது அனுபவத்திற்க்குள் ஒரு விசயம் நடக்கவில்லை என்றால் அதனை நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை என்பது எனக்கு அதனைப்பற்றி தெரியாது என்பதை சோதிடம் பார்க்க வந்தவர்களிடம் சொல்லிவிடுவேன்.

நமது வாடிக்கையாளர்கள் நல்ல சோதிட அறிவோடு தான் நம்மிடம் வந்து சோதிடம் பார்ப்பார்கள். அவர்கள் இந்த புத்தகத்தில் இப்படி எழுதியுள்ளார்கள் அதனை படித்து பாருங்கள் என்று சொல்லுவார்கள். நானும் சரி படிக்கலாம் என்று சொல்லுவேன் ஆனால் நான் படிப்பதில்லை.

எனக்கு சோதிடஅறிவு என்பது இயற்கையாக உருவான கலை. அது எனக்கு பல்வேறு அனுபவத்தில் வழியாக கற்றுக்கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு விசயம் நடக்கும்பொழுது அது அனுபவம் வழியாகவே எனக்கு கொடுத்துவிட்டு செல்லும். 

அனுபவத்தில் நடப்பதை வைத்து நான் சொல்லும் பலன் மிகசரியாக இருக்கும். என் அனுபவத்தில் அது நடக்கவில்லை என்றால் நான் வெளிப்படையாகவே எனக்கு தெரியவில்லை என்று சொல்லிவிடுவேன்.

புத்தகத்தை ஒரே அடியாக நான் தவறு என்று சொல்லவில்லை எனக்கு அனுபவத்தில் அது நடக்கவில்லை என்பது மட்டுமே உண்மை. எதிர்காலத்தில் அந்த அனுபவம் நடக்கலாம் அப்பொழுது அதனை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். நான் சொல்லுவது அனைத்தும் அனுபவங்களை வைத்து மட்டுமே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: