வணக்கம்!
ராகு பலனைப்பற்றி இரவு நேரத்தில் பார்த்து வருகிறோம். இராகு ஒருவருக்கு பலமாக அமைந்துவிட்டால் அவர் வெளிநாட்டு பயணங்களை அதிகம் மேற்க்கொள்வார் என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்க்கு வாய்ப்பு அமையாது ஆனால் அவர்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் தொடர்பு அதிகமாக இருக்கும்.
கிராமபுறங்களில் இப்படிப்பட்டவர்களை நான் அதிகம் பார்த்து இருக்கிறேன். வெளிநாட்டில் இருந்து இவர்களுக்கு பணமாக அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். இங்கு நிறைய நிலங்களை வாங்கிக்கொண்டு இருப்பார்கள். கிராமபுறங்களில் உள்ளவர்களின் அளவுக்கோல் என்பது நிலத்தை வைத்து தான் இருக்கும்.
நகரத்தில் பல பேர்களை நீங்களே பார்த்து இருக்கலாம். அவர்களின் தொடர்பு அனைத்து வெளிநாடுகளில் உள்ளவர்களை சார்ந்தே இருக்கும். அவர்கள் இங்கு இருந்துக்கொண்டு அனைத்து வியாபாரத்தை யும் செய்துக்கொண்டு இருப்பார்கள்.
ராகு வெளிநாடுகளுக்கு அனுப்பவில்லை என்றாலும் வெளிநாட்டு தொடர்புகளை வைத்து இவர்கள் வாழ்வு நன்றாக அமைவது போல் செய்து கொடுத்துக்கொண்டிருக்கும்.
ராகு என்றாலே நாம் பயப்பட்டுக்கொண்டு தான் இருப்போம். ராகு நல்லது செய்ய தொடங்கிவிட்டால் அது நிறைய செய்துக்கொடுக்கும். அதனை வைத்து மிகப்பெரிய ஆளாக மாறிவிடலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment