வணக்கம்!
எந்த ஒரு செயல் செய்யும்பொழுதும் அதனை எப்படியாவது நடத்திக்கொடுக்கவேண்டும் என்பதில் தான் எனது முழுகவனமும் இருக்கும். நம்மை நாடி வந்தவர்களுக்கு எப்படியாவது ஒரு வழியை காட்டிவிடவேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவேன்.
பணம் மட்டும் தான் குறிக்காேளாக கொண்டால் இத்தனை வருடங்கள் இந்த தொழிலை நான் செய்து இருக்கவே முடியாது. மக்கள் நம்மை ஓரங்கட்டுகிறார்களோ இல்லையோ கடவுள் நம்மை ஓரங்கட்டிவிடுவார்.
ஒவ்வொருவருக்கும் என்று பரிகாரத்தை தனிகவனத்தோடு செய்து தான் வருகிறேன். நம்ம ஆட்கள் பல பேர் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் அவர்கள் அனைவரும் நம்மை நாடி வரும்பொழுது அவர்களின் பரிகாரத்தை நாம் இங்கு தான் செய்யவேண்டியுள்ளது. அதனையும் செய்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
ஒரு நபர் கூட விட்டுவிடாமல் ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொண்டு செய்கிறேன். அவர்களுக்கு என்று முறையான தகவல் அனுப்பி அவர்களுக்கு செய்கிறோம்.
பல தவறுகளை மக்கள் மறைத்துவிட்டு தான் இதற்கு பரிகாரம் செய்யுங்கள் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறு வெளியில் தெரியகூடாது என்று மறைக்கிறார்கள். நீங்கள் எப்படிப்பட்ட தவறு செய்து இருந்தாலும் அதனை நீங்கள் என்னிடம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அந்த தவறுக்கும் சேர்த்து நாம் வழித்தேடி ஒரு நல்லதை நாம் பெறலாம்.
நீங்கள் மறைத்தால் அது நீண்ட நாள்கள் இழுத்துக்கொண்டு செல்லும். நான் செய்யவேண்டியதை செய்துவிடுவேன். நடப்பது கால தாமதம் ஏற்படும். முன்கூட்டியே அனைத்தையும் சொல்லிவிட்டு வழிதேட சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment