வணக்கம்!
நமது ஜாதககதம்பத்தின் வழியாக செய்யப்படும் நல்லபணிகளை வெளியில் சொல்லப்படுவதில்லை அதற்கு காரணம் நான் ஒரு தொழில்முறையாக இதனை செய்துவருவதால் வெளியில் அதிகம் காட்டிக்கொள்வதில்லை.
தொழில்முறையில் இதனை செய்தாலும் பல நல்ல பணிகளை நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் செய்யும் பணிகள் அனைத்தும் கோவில்களை சார்ந்தே அதிகம் இருக்கும். பொதுநலபணிகள் என்பதை நான் அதிகம் எடுப்பதில்லை அதற்கு காரணமும் இருக்கின்றது.
பொதுநலப்பணிகள் என்று வரும்பொழுது அரசாங்க தலையீடு இருப்பதால் அதனை அதிகம் கண்டுக்கொள்வதில்லை. அரசாங்கம் அதனை செய்யவேண்டும். நமது பணிகள் அனைத்தும் கோவில்களை சார்ந்தே இருக்கும்.
ஆன்மீகவழியில் இருக்கும்பொழுது அதனை நாம் செய்தால் அதன்வழியாக பலபேர் பயன்பெறமுடியும் என்பதால் அப்படிப்பட்ட விசயத்தின் மீது அதிக கவனம் செலுத்துவேன். அம்மன் பூஜை முடிந்தபிறகு ஜாதககதம்பத்தின் வழியாக ஒரு நல்ல ஆற்றலை வழங்ககூடிய ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதாவது ஒரு கோவிலில் ஏதோ ஒரு விழா நடத்தப்படும். அதனைப்பற்றி ஒரு சில தினங்களில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
ஜாதககதம்பத்தின் வழியாக வந்த பணத்தில் இது நடத்தப்படுகிறது. இதில் அனைவருக்கும் பங்கு உள்ளது. அதாவது உங்களுக்கும் இதில் பங்குள்ளது என்பதை தெரிவிக்கிறேன். ஒரு சில தினங்களில் எந்த நிகழ்ச்சி என்பதை தெரிவிக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment